Tuesday, March 2, 2021

சூரியன் பற்றிய தகவல்கள்

 சூரிய குடும்பத்தில் மிக முக்கிய புள்ளியாக விளங்குவது சூரியன் ஆகும். ஞாயிற்று தொகுதியில் உள்ள பெரிய நட்சத்திரமாக இது விளங்குவதோடு சூரிய குடும்பத்தில் உள்ள ஏனைய கோள்களை தன்வசம் ஈர்த்து வைத்திருக்கும் சிறப்பியல்பினை கொண்டிருக்கின்றது. சூரியன் ஆனது கோளவடிவில் காணப்படுவதோடு தன்னுடைய அச்சிலும் சுழல்கின்றது. 

ஞாயிற்று தொகுதியானது சூரியனை மையமாக வைத்துக்கொண்டு தான் நிலைத்து இருக்கிறது. புவியில் இருந்து சராசரியாக 149.65 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சூரியன் அமைந்துள்ளது. சூரியனின் விட்டம் 1.4 மில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும். அத்துடன் சூரியனின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 6000 பாகை செல்ஸியஸ் ஆகும். 

சூரியன் பற்றிய தகவல்கள்

சூரியனின் உட்பகுதியில் உள்ள ஐதரசன் வாயு ஹீலியமாக மாறுவதனால் சூரிய ஒளியானது எமக்கு கிடைக்கின்றது. இந்த சூரியன் ஆனது புவியில் நடைபெறுகின்ற காலநிலை மாற்றம், மனித நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு முக்கிய காரணியாக திகழ்கின்றது. சூரியனை சுற்றி  புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ்,  நெப்டியூன் ஆகிய 8 கோள்களும் சுற்றுகின்றன.

சூரியன் ஆனது இற்றைக்கு 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் பெற்றது. சூரியன் புவியினை போல 1300000 மடங்கு பெரியது. சூரியனின் ஆரை சராசரியாக 696340 கிலோமீட்டர்கள் ஆக காணப்படுகின்றது. இது பார்ப்பதற்கு மஞ்சள் பந்து போல காட்சியளிக்கும். சூரியன் தன்னுடைய அச்சில் புவியின் துருவ பகுதியை சுற்றிவர 35 நாட்கள் எடுக்கும்.

சூரியன் பற்றிய தகவல்கள்

சூரியனில் 92.1 சதவீதமான ஐதரசன் வாயுவும், 7.8 சதவீதமான ஹீலியம் வாயுவும் காணப்படுகின்றது. சூரியனுக்கு வளையங்கள் எதுவும் இல்லை. சூரியனுக்கு சக்தி இல்லை என்றால் நாம் இந்த பூமியில் வாழ முடியாது. இந்த சூரியனின் கோளவக வெப்பநிலை 27 மில்லியன் பாகை செல்ஸியஸ் ஆக  காணப்படுகின்றது.

சூரியன் ஆனது வினாடிக்கு 270 கிலோமீட்டர் வேகத்திற்கு பயணம் செய்யும் தன்மை கொண்டது. இந்த சூரியனுக்கு 7 வகையான  படைகள் காணப்படுகின்றன. அவையாவன Corona Layer, Transition Region, Chromosphere Layer, Photosphere Layer, Core, Convection Layer, Radiative Zone போன்றனவாகும். இவ்வாறு சூரியன் பற்றிய பல்வேறு விடயங்களினை நாம் அறிந்துகொள்ள முடியும். 


No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...